வன்கூவரில் வீடற்றவர்களின் கணக்கெடுப்பு ஆரம்பம்!

வன்கூவர் நகரில் வீடற்றவர்களின் கணக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்றும் இரவு வேளைகளில் அவசர முகாம்களில் தங்கியுள்ள மக்களை கணக்கெடுக்கும் பணிகள் ஆரம்பமாகின.

இதன் முழு விபரம் மே மாதமளவில் வான்கூவர் நகரசபைக்கு வழங்கப்படும் என்றும் இந்த தொகுப்பு அறிக்கை நகரின் இணையதளத்தில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்று சென்ற ஒரு தன்னார்வ மற்றும் பெயர் வெளியிடாத ஒரு அமைப்பும் இணைந்து, இவர்கள் வீடு, வயது, பாலினம், இனம் மற்றும் சுகாதார கவலைகள் இல்லாமல் எவ்வளவு காலம் வாழ்கின்றனர் என்ற தகவலை திரட்டியது.

மேலும் இந்த கணக்கெடுப்பு மூலம் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படியில் தேவைக்கேற்ப மக்களுக்கு இலகு வீட்டுவசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வான்கூவர் மேயர் கென்னடி ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.