உயர்கல்வித் துறையில் தர உறுதி முகவர்களுக்கான சர்வதேச வலயமைப்பின் 15ஆவது மாநாடு!!

உயர்கல்வித் துறையில் தர உறுதி முகவர்களுக்கான சர்வதேச வலயமைப்பின் 15ஆவது மாநாடு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
உயர்கல்வித் துறையில் தர உறுதிக்கான முகவர் நிறுவனங்களின் சர்வதேச வலயமைப்பின் 15ஆவது மாநாட்டின் (IQAAHE) இரண்டாவது நாளான இன்றைய (26) அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர்கள் மற்றும் விசேட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுக்கான நினைவுச் சின்னங்களையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வாவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டுள்ளதுடன், உயர்கல்வித் துறையில் தர உறுதிப்பாட்டுக்கான முகவர் அமைப்பின் தலைவர் கலாநிதி சுசன்ன கரக்கான்யனினால் கருத்துரை வழங்கப்பட்டது.

அமைச்சர்  ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.