றோட்டறக்ட் கழகமும் சேவைகளும்!!


51வது வருடத்தின் றோட்டறக்ட் வாரத்தை முன்னிட்டு நல்லூர் பாரம் பரிய றோட்டறக்ட் கழகத்தினால் இவ்வாக்கம் வெளியிடப்படுகிறது. றோட்டறக்ட் வாரமானது மார்ச் 13ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.


   றோட்டறக்ட் கழகமானது 1968ம் ஆண்டு மார்ச் 13ம் திகதி கரோலினா நகரில் ஆரம்பிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் 10904 றோட்டறக்ட் கழகங்களும் 250792 றோட்ரக்றர்களையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றில் இலங்கையில் றோட்டரி சர்வதேச மாவட்டம் 3220இல் 70 றோட்டறக்ட் கழகங்களும் 4000 ற்கும் மேற்பட்ட றோட்ரக்றர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் தனியார் மற்றும் அரச பல்கலைக்கழக றோட்டறக்ட் கழகம், கல்வி நிறுவனங்கள் சார்ந்த றோட்டறக்ட் கழகம் மற்றும் சமூகம் சார்ந்த றோட்டறக்ட் கழகங்களின் அடிப்படையில் 18 - 30 வயது வரையான உறுப்பினர்களை உள்வாங்கி பல்வேறு சேவைகளை ஆற்றி வருகின்றது.

2018-2019 இன் காலப்பகுதிக்குரிய றோட்டறி மாவட்ட ஆளுநராக Rtn. PHF.PP.டுஷான் சோஷாவும்  றோட்டறி சர்வதிச மாவட்டம் 3220 இன் றோட்டறக்ட் மாவட்டப்பிரதிநிதி Rtr.PP.மொஹமட் அம்ஜத் யூஸுfப்பும் தலைமை வகிக்கின்றனர்.

இவ்றோட்டறக்ட் கழகங்கள் பிரதானமாக றோட்டறியின் 6 வகையான சேவைகளை நோக்கமாகக் கொண்டு தமது சேவைகளை ஆற்றிவருகின்றன.அவை சமாதானம் மற்றும் மோதல் தடுப்பு /தீர்மானம், நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை, நீர் மற்றும் சுத்திகரிப்பு, தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம், அடிப்படைக்கல்வி மற்றும் கல்வியறிவு, பொருளாதார மற்றும் சமூக விருத்தி போன்றனவாகும். இவை கழக சேவை, சர்வதேச சேவை,சமூக சேவை, தொழில் /ஆற்றல் விருத்தி என்பவற்றினூடாக சேவைகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
றோட்டறக்ட் கழகத்தில் இணைவதன் மூலம் உறுப்பினர்கள் கழகத்தை எவ்வாறு முன்னெடுத்து நடாத்துதல், நிதி சேகரிப்பு, கழகங்களிடையேயான நட்புறவு மற்றும் தொடர்பாடல் வலையமைப்பு, தனிப்பட்ட ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான களம்  போன்ற நன்மைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

ரோட்டறி சர்வதேச மாவட்டம் 3220 இல் நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம் 20.sep.2016 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது 3வது வருட சேவையை Rtr.கிருசாந்தி தலைமையில் ஆற்றி வருகின்றது. இக்கழகம் கல்விக்கு கரம் கொடுத்தல்,வாழ்வாதார உதவிகள், நோய் பற்றிய விழிப்புணர்வு போன்ற பல சேவைகளை தொடர்ந்து மேற்கொள்வதுடன், இலங்கையில் மட்டுமல்லாது ஏனைய பிறநாடுகளில் உள்ள றோட்டறக்ட் கழகங்களுடனும் இணைந்து செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

றோட்டறக்ட் கழகங்களின் செயற்றிட்டங்களை ஊக்குவிக்குமுகமாக மாவட்ட றோட்டறக்ட்  கழகம் மற்றும் நல்லூர் றோட்டறிக்கழகத்தினால் ஒழுங்குபடுத்தப்டுகின்ற விருது வழங்கல் சிறப்புமிக்கதாகும்.Rtr.வ.கிருசாந்தி
தலைவர் (2018-19)
நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம்
26.03.2019

No comments

Powered by Blogger.