நியூசிலாந்தில் பள்ளிவாசல் தாக்குதலில் இதுவரை 49 நபர்கள் கொல்லபட்டுள்ளனர்!.!

நியூசிலாந்தில் பள்ளிவாசலில் நுழைந்து தீவிரவாதி‌ ஒருவன் நடத்திய தாக்குதலில் இதுவரை 49 நபர்கள் கொல்லபட்டுள்ளனர்.


உடனடியாக மக்களுக்கு பேட்டி அளித்த நியூஸிலாந்து பிரதமர், இந்த தீவிரவாத செயல்கள் கண்டிக்கப்பட தக்கது என்றும், நியுஸிலாந்தின் இது கருப்பு நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்ட்ரேலிய பிரதமர், இதில் தொடர்புடையவன் Right Wing Terrorist என்றும் தம்முடைய கண்டனத்தை தெறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களே அச்சப்பட வேண்டாம் நீங்கள் எங்கள் இதயத்திலும் சிந்னைகளிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறீர்கள். இந்த கடினமான சூழ்நிலையிலும்
 நாங்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்போம் என்று கனடா பிரதமர் கூறியுள்ளார்.

நியூஸிலாந்து மக்கள் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலுக்கு சென்று, தங்களுடைய அனுதாபங்களை மலர்கொத்தை வைத்து தெரிவித்து வருகின்றனர்.

இத்தாக்குதலில் 5 வயது குழந்தை ஒன்றும் சுடப்பட்டு உள்ளது. மேலும் தந்தை ஒருவர் தன் பச்சிளம் குழந்தையை மறைத்து, தன் மீது குண்டுகளை வாங்கி காப்பாற்றியுள்ளார்.

உலகம் முழுவதும் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவில் இருக்கும் Right Wing Terrorist சங்பரிவார கூட்டங்கள், தங்களுடைய சக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்காக மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர் (இணைப்பில்).

ஆக அப்பாவிகளை கொல்லும் யாராயினும், அவர்கள் எம்மதத்தில் இருந்தாலும், அவர்கள் மனித தன்மை சிறிதும் அற்ற தீவிரவாதிகளே!

No comments

Powered by Blogger.