தமிழரசு கட்சியின் தொடரும் துரோகமே!

இன்றைய மாபெரும் பேரணி. ஐ.நா மனித உரிமைப் பேரவை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படக்கூடாது!

கால அவகாசம் வேணும் ஆனா வேணாம். -தமிழரசு கட்சி!

தமிழரசு கட்சி தலைவர்கள் சம்பந்தன் சுமந்திரன் மாவை ஆகியோர் இலங்கைக்கு கால் நீடிப்பு கொடுக்க வேண்டும் என்கிற இலங்கை அரசு அனுசரணை வழங்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலக பிரேரணைக்கு ஆதரவு  என்கிறார்கள் . இதை எதிர்ப்பவர்களை தீவிரவாதிகள் என்கிறார் சுமந்திரன்.

மறுபுறம்  இலங்கைக்கு கால நீடிப்பு கொடுக்க கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்து யாழ் பல்கலை சமூகம் ஏற்பாடு செய்து இருக்கும் போராட்டத்தில் இன்று மாவை சேனாதிராஜா

ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு ? வடக்குக்கு ஒரு முகம் .தெற்குக்கு ஒரு முகம் .சர்வதேசத்திற்கு இன்னுமொரு முகம் ..

அறிவார்ந்த ஒரு சமூகத்தை அந்த சமூகத்தை பிரதிநித்துவம் செய்யும் அரசியல் கட்சி எவ்வளவு மோசமாக ஏமாற்றுகிறது என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் என்ன வேண்டும் .

இதுவே நாம் தமிழரசுக் கட்சியை தொடர் விமர்சனத்திற்குள்ளாக்குவதன் அடிப்படை.

நாங்கள் ஏமாறும் வரை ஏமாற்றுபவர்கள்

No comments

Powered by Blogger.