பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் சிறு தீப்பொறியில் இருந்தே தொடங்கியது!

“புலம்பெயர்ந்த தமிழர் சிலரே கால அவகாசம் கொடுக்ககூடாது என்று எதிர்க்கிறார்கள். அவர்கள் தீவிரவாதிகள்” என்று கூறிய சுமந்திரன் முகத்தில் கரியை பூசியுள்ளனர் மாணவர்கள்.
ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கால அவகாசம் வழங்குவதை எதிர்க்கிறார்கள் என்பதை மாணவர்கள் தமது போராட்டம் மூலம் உலகிற்கு தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக, தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழ் மக்களால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கும் இலங்கை அரசின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளனர் மாணவர்கள்.
ஒரு கட்சி காசு கொடுக்கிறது என்றார்கள்
மாணவர்களுக்கு போன் வாங்கி கொடுக்கிறார்கள் என்றார்கள்
மாணவர்கள் முதலில் பகிடிவதையை கவனிக்கட்டும் என்றார்கள்
இப்படி எத்தனைவிதமான விமர்சனங்களை மாணவர்கள் மேல் வைத்தார்கள்.
அத்தனைவிதமான விமர்சனங்களையும் பொறுமையாக வாங்கிக்கொண்டு சாதித்துள்ளார்கள் மாணவர்கள்.
பற்றி எரியப்போகும் விடுதலை தீக்கு சிறு பொறி நெருப்பாக தம்மை மாணவர்கள் அர்ப்பணித்துள்ளார்கள்.
சபாஷ் மாணவர்களே!
கருத்துகள் இல்லை