தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாதல் இல்லை - தமிழாலயம் பேர்லின்!

தமிழ் எங்கள் பிறவியின் தாய். எங்கள் உயிருக்கு நிகர். எங்கள் உரிமைக்கு வேர். அந்தத் தமிழை அகிலமெலாம் முளையிட்டுப் பயிராய் வளர்க்க
அரும்பணியாற்றிய உலகப்பெருந் தமிழன் “மாமனிதர்” திரு. இரா. நாகலிங்கம் ஐயா எமக்குத் தாயுமானவர். எமது இனத்தின் மேன்மைக்காக ஐயா மிகவும் கடினமாகத் தனது இறுதிவரை உழைத்தவர்.

 எமது இனத்துக்காக என்றென்றும் தன் பணி தொடரும்வண்ணம் பல ஆயிரக்கணக்கான மாணவச் சிற்பிகளையும் ஆசிரியர்களையும் தமிழாலயங்களையும் அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

பூமியின் திசை நான்கும் புகலிடம் பெற்று, வேற்று மொழிப் பண்பாட்டுக்குள் பிறந்து வாழ்ந்துவரும் எமது இனத்தின் இளந் தலைமுறையினர், எமது அடையாளமான தாய்மொழியைக் கற்றுத் தாயக நினைவோடு வாழ வழிசமைத்த தமிழ் அன்னையின் நினைவு  நாளான இன்று பேர்லின் தமிழாலயத்தில் மாணவர்களால் சுடர்வணக்கம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நூலாக்கத் தந்தை  திரு. சின்னத்துரை கமலநாதன் (முனைவர்)
அவர்களையும் நெஞ்சில் நிறுத்தி சுடர்வணக்கம் செய்யப்பட்டது.

தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாதல் இல்லை. தமிழ் வாழும் வரை, தமிழ் இனம் வாழும் வரை இருவரும் என்றென்றும் எம்மோடு உயிரெனக் கலந்திருப்பார்!


No comments

Powered by Blogger.