அஜித்திற்கு அழைப்பு விடுக்கும் சுசீந்திரன்!!

வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல', 'ராஜபாட்டை', 'மாவீரன் கிட்டு', 'ஜீனியஸ்' போன்ற படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.
இவர் அஜித்தை அரசியலுக்கு வரும்படி டிவீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஒட்டுமொத்த தமிழகமுமே பரபரப்பாக இயங்கி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் சில பிரபலங்களும் அரசியலுக்குள் வந்துவிட்டனர். இந்நிலையில் அஜித்துக்கு கடிதம் எழுதுவது போல் இயக்குநர் சுசீந்திரன் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், ''40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.., உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அஜித்தோ தனக்கு அரசியலில் வரும் எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை என்று பல முறை சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தன்னுடைய கடைசி பேட்டியில் கூட சொல்லியிருப்பார். இவ்வளவு ஏன் அஜித்தை பற்றி பா.ஜ.க தலைவர் தமிழிசை கூட சமீபத்தில் ஒரு பேரவையில் சொல்லியிருந்தார். அதற்கு 'எனக்கு அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்பதுபோல் அஜித் அறிக்கை வெளியிட்டிருந்தார் . அஜித் ரசிகர்களும், 'எங்களுக்கு அஜித் போதும், அரசியல் வேண்டாம் என ரிப்ளை செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இதுதான் தற்போது டிரெண்டிங்!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.