முல்லைத்தீவில் பிள்ளையாருக்கு வந்த சோதனை!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள  ஊற்றங்கரை பிள்ளையாா் ஆலயத்தின் கதவுகளை உடைத்து உட்ப்புகுந்த திருடா்கள்  பல லட்சம் பெறுமதியான நகைகளை அங்கிருந்து களவாடி சென்றுள்ளனா்.
இச் சம்பவம் தொடா்பில் மேலும் தொியவருவதாவது, ஆலயத்தின் வாசல் கதவினை உடைத்து மூலஸ்தானத்தில் பிள்ளையாருக்குச் சாத்தப்பட்டிருந்த வெள்ளி கவசம் மற்றும் அதன் வெள்ளி குடை, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். களவாடப்பட்ட நகைகளின் பெறுமதி10 லட்சத்திற்கும் மேற்பட்டதென ஆலய நிா்வாகம் கூறியுள்ளது.

மேலதிக விசாரணை பொலிசார் மேற்க்கொன்டு வருகின்றர்கள்.

No comments

Powered by Blogger.