போர்க்குற்றம் குறித்து இந்திய அமைதிப்படையிடமும் விசாரிக்க வேண்டும்!

போர்க்குற்றம் குறித்து இலங்கை இராணுவத்தை விசாரிக்க வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் உட்பட இந்திய அமைதிப்படை மற்றும் சர்வதேச உளவு நிறுவனங்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.


எனவே, உண்மையைக் கண்டறியவேண்டும் என்று கூறி வெறுமனே விசாரணைகளை நடத்துவதை விடுத்து, நடந்தவற்றை மறந்து அடுத்தக்கட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கம் ஜெனீவா பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது மிகப்பெரும் ஒரு அரசியல் தவறாகும்.

நாம் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இந்த விடயத்தினை இன்னும் இழுத்தடிக்காமல் இத்துடன் முடித்து விடுமாறு, சர்வதேச நாடுகளிடம் கேட்கவேண்டும்.

ஆணைக்குழு அமைத்து தகவல்களைத் திரட்டிக்கொண்டிருக்காமல், நடைமுறைக்கு சாத்தியமான ஒரு வேலைத்திட்டத்தை ஜெனீவாவில் முன்வைக்க வேண்டும். இதனை நான் அமைச்சரவையில் முன்வைப்பேன்.

நடந்த உண்மைகளை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவர். அதனையும் மீறி உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்றால், எல்லோரும் ஒன்றாக உண்மையை அறியலாம்.

விடுதலைப் புலிகள், மக்கள் விடுதலை முன்னணி, ஜே.வி.பியைக் கொலைச் செய்ய இருந்தவர்கள், இந்திய இராணுவம், இலங்கை இராணுவம், இந்திய வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் அணைவரையும் விசாரிக்க வேண்டும். இல்லை எல்லாவற்றையும் மறந்து விடுவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.