எம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்..!

உறவுகளுக்காய்.....!

இருள் மெல்ல மெல்லக் கரைந்து
கிழக்கின் கதிர்கள் தாய்மண்ணை
முத்தமிடத் தயாராகிக்கொண்டிருந்தது

கானல் விழியில் கனவுகள்
செய்துகொண்டிருந்த அந்த நாட்களில்...
உணர்வுகள் தீவிரம் கொண்டு
எண்ணெய்ச்சட்டியில் வீசியெறியப்பட்ட
தமிழினச் சிசு தொடங்கி
கொழுந்துவிட்டெரிந்த எம் அறிவுப்
பொக்கிஷங்கள் வரை அனைத்தையும்...
எண்ணி எண்ணி வெந்துகொண்டிருந்தது
மனமொழி!

வியர்வையைக் குடித்துக் குடித்து
போர்க்களப் பயிற்சியில் லயித்திருந்த ஆழ்மனமெங்கும்....
எம் மண்ணில் மறுக்கப்பட்ட எம் உரிமமும்
சிதைக்கப்பட்ட புத்த போதனையும்
செந்தீயாய் எரிந்துகொண்டிருந்தது
பேராறின் முடிவற்ற ஊற்றெடுப்பாய்

வீர வேங்கைகள் தாக்குதல் தருணம்
பொதுமக்கள் உயிரில் நச்சுப்புகையடித்து
மீண்டும் மீண்டுமாய் உரிமைகள் மறுத்து
நாடகமாடி வென்றது கோளை அரசு
தெளிந்த நீரில் ஒருதுளி விஷமாய்

இன்றும் நாம்....
பிணவாடையில் சுவாசம் நெய்து
தசை நார்களில் பாலம் செய்து
இருளைக் கரைத்து சூரயக் கதிர்கள்
கொய்துகொண்டிருக்கிறோம்
உறவுகளின் வரவுக்காய்....
பாலைவனத்தில்  ஒருதுளி துமிப்புக்கான ஏக்கமாய்..!


தமிழ் நதி
20.03.2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.