அபரிமித வளர்ச்சி கண்டுள்ள திபெத்!

தென் மேற்கு சீனாவின் தனிப்படுத்தப்பட்ட பிராத்தியமான திபெத் கடந்த 6 தசாப்தங்களாக வியக்கத்தக்க வகையில் பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளது.


ஜனநாயக சீர்திருத்தத்தின் அடிப்படையில் உயர்தர வளர்ச்சி பாதையில் பயணித்துள்ள திபெத்தின் சொந்த பண்பியல்புகள் தற்போது வௌிப்பட்டுள்ளன.

திபெத்தில் ஜனநாயக சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட்டு இந்த வருடம் 60 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அத்துடன் அந்த பிராந்தியத்தில் இருந்து வறுமையை ஒழிக்கும் ஆரம்ப புள்ளியாகவும் இந்த விழா கருதப்படுகிறது.

இதனடிப்படையில், பாரம்பரிய வசந்தகால ஏர் உழும் விழாவும் அண்மையில் ஷன்னான் நகருக்கு அருகாமையில் உள்ள கெசோங் கிராமத்தில் இடம்பெற்றது.

2019 ஆம் ஆண்டில் சிறந்த விளைச்சல் ஏற்பட வேண்டும் பிரார்த்திப்பதற்காக கிராமத்தவர்கள் அங்கு கூடியிருந்தனர்.

ஜனநாயக சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர், 1959 ஆம் ஆண்டில் நிலப்பிரபுத்துவ சேர்ப்பு முறையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டலிருந்து கெசோங் கிராம மக்கள் தங்களின் சொந்த விளைநிலங்களையும், வாழ்வாதாரத்தையும் பெற்றனர்.

அதன்பின்னர் தமது வாழ்க்கை முறையை அவர்கள் பெருமளவில் மாற்றிக் கொண்டனர். கடந்த வருடம் கிராமத்தில் உள்ள 218 குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒப்பந்த கிராமப்புற நில உரிமை சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

இதன் முதல்கட்ட செயற்றிட்டத்தின் ஊடாக முதல் குழுவினர் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளை பெறவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் திட்டத்தில் இலகுவான வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளதாக சான்றிதழை பெற்றுக் கொண்ட உள்ளூர் வாசியான பாசாங் சிரான் என்பவர் தெரிவித்தார்.

அத்துடன் அவர் தற்போது ஈட்டுக்கடன் பெற்று பேருந்து ஒன்றை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவித்தார். இதனூடாக வருடாந்தம் சுமார் ஒரு லட்சம் யுவான்களை ஈட்டமுடியும் என்று அவர் நம்பிக்கையாக கூறுகிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.