கேள் மணிதா நாட்களும் உன் உறவே!!


காலச் சிறையில் கட்டுண்ட பொழுதில்
நாட்களுடன் பேசல்
அலாதிப் பிரிய மென்பான்

அவன் நாட்களைச் சுமந்து திரிகிறான்
நாட்களை காதலியாகவும் நண்பன் மற்றும் தாய் குழந்தையாகவும்
சுமக்கின்றான்

நாட்களுடன் படுப்பவர்
கனவுகாண்பவர் ஏராளம்
பிறந்த நாளைச் சுமந்து திரிவர் சிலர்
இறந்த நாளைக் கொண்டாடுவர் சிலர்
திருமண நாளையும்
முதன் முதல் காதல் சம்மதம் பெற்ற நாளையும்
தோழில் தூக்கிக் கொண்டாடுவர் பலர்

இறக்கும் நாளைத் தெரியுமா
பிறக்கும் நாள் போல்
தெரிந்தால் மனிதர்களைப் பிடிக்க முடியுமா என்ன!

அவன் குளத்தருகே பயணிக்கிறான்
மீன்களின் மகிழ்வையும்
குடிபோதையில் குழுமிய இளைஞர்களையும் பார்க்கிறான்

மகிழ்வாயிருக்கும் மீன்களுக்குத் தெரியுமா
குடிபோதையிலிருக்கும் இளைஞர்கள்நாளைதூண்டிலில் தம்மைத்தூக்குவரென்று
இல்லையா

சில பொழுதில்
சிலவற்றை அறியாதிருக்கும் போது
இறுதி வரைமகிழ்ச்சி வந்து போகுதுசொர்க்கமென

மீன்விற்ற காசிலோ
கள்ள மண் விற்ற காசிலோ
லீசிங் கடனாளியிடம் பறித்த காசிலோ
குடித்து வீதி விபத்துக்குள்ளாகி இறப்போமா
என்று அறிவார்களா அந்த இளைஞர்கள்

இப்படி நாட்கள் பலவிதம்
பறவைகளுக்கு
மீன்களுக்கு
தேன்களுக்கு
அரசிசயல் வாதிகளுக்கு
மது போதைகளுக்கு
மத போதகர்களுக்கு எனநாட்கள் நீண்டு கொண்டே போகும்

எல்லா நாட்களும்
எல்லோருக்கும்
எல்லாமாதிரியும்அமைவதில்லை

நாட்களென்பது
மனித நரம்பு போன்றது

மனிதனைஆக்கவும்
அழிக்கவும்
அசைக்கவும்
ஆனந்திக்கவும் வைக்கும்

கேள் மனிதா
நாட்களும்
உன் உறவே
நாட்களும்
உன் உணர்வே

த.செல்வா
24.03.2019

No comments

Powered by Blogger.