இந்த பாராட்டு மழையில் இன்று நனைந்த யாழ்குடா நாட்டு பட்டதாரிகள் எத்தனை?.எத்தனை?

யாழ்ப்பாண  குடா நாட்டு பட்டதாரிகளுக்கான பாராட்டு மழை........
இன்றைய உதயன் பத்திரிகையில் பொழிந்திருக்கிறது.......

பாராட்டு மழையில் இருந்து சில துளிகள் இதோ...........

* சோம்பேறிகளாம்
 ( வேலையற்ற பட்டதாரிகள் தொடங்கி வேலைபெற்ற பட்டதாரிகள், அரசுஊழியர்கள் உட்பட)

*தூரப் பிரதேசங்களுக்கு சென்று பணியாற்றுவதற்கு பின்னடிக்கும் தன்மையாம்
( குறிப்பாக வறுமைப்பிரதேசம், தீவகப்பகுதிகளுக்கு)

*அரச  உத்தியோகம் மட்டுமே வேண்டுமென ஒற்றை காலில் தவமிருக்கிறார்களாம்
( 2012 இலிருந்து பட்டதாரிகளாக பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறியவர்கள்)

*சொகுசுத்தன்மைக்காகவும், ஓய்வூதியத்திற்காகவுமே அரச தொழிலை எதிர்பார்க்கிறார்களாம்

*சிங்களவன் தமிழன் என்ற தேசியம் பேசுவதில் பலனில்லலையாம்

* புறொயிலர் கோழிபோல வெளிச்சூழலுக்கு தாக்கு பிடிக்க முடியாதவர்களாம்

*சுயதொழில் முயற்சி மேற்கொண்டு வெற்றியீட்டுவதற்கான திறனை பல்கலைக்கழகங்கள் வழங்கவில்லையாம்......


இவ்வாறு  பத்திரிகையில் வெளியிட்ட செயல்பாட்டை வண்மையா கண்டிப்பதாக  தெரிவித்தார். இது போன்றவை  கல்வியை மழுங்கடிக்கும் செயல்திட்டம் என கூறலாம்.

இது உண்மையா ......பொய்யா....?

இப்பாராட்டுமழையினால் என் எண்ணத்தில் விழுந்த சில துளிகள் இதோ........

எழுத்தாளர் என்ற போர்வையிலே எவர் வேண்டுமானாலும் கற்பனையிலே  கட்டுரையினை புனையலாம் ஆனால் ஒவ்வொரு பட்டதாரிகளினதும் உண்மைநிலையினை அவர்கள் அருகிலே இருந்து அவர்கள் பட்ட வலியினை உணர்ந்தவர்களால் மட்டுமே
சரியாக எழுத முடியும்

இங்கே பட்டதாரிகள் சோம்பேறிகளாம்
ஆம்
பட்டதாரிகள் சோம்பேறிகள்தான்....!
கடனைப்பட்டு பிறரிடம் கடமைப்பட்டு கல்வியையும் கற்று கரையேறி வரும்போது வேலைக்கான வெற்றிடங்கள் நாடுபூராகவும் இருந்தும்
பட்டதாரிகளை நடுவீதிகளில் நிறுத்தி பட்டினியா க்கும் அரசியல்வாதிகளும்,
இவ்வாறு மழுங்கடித்து எழுதும் எழுத்தாளர்களும் பத்திரிகைகளும் இருக்கும் வரை பட்டதாரிகள் சோம்பேறிகள்தான்

அத்தோடு நியமனம் கிடைத்தும் நியமனக்கடிதத்தை பட்டதாரிகள் பலர் பெற்றுக்கொள்ளவில்லையாம் அதற்கு காரணம் தூரதேசங்களுக்கு செல்ல மனமில்லாமல்
இருக்கிறார்களாம்

ஆமா........பட்டதாரிகள் ஆகியும் வேலை கிடைக்காமல் நடுவீதியில் நின்று விட்டு
காத்திருந்தே காலம் போன பட்டதாரிகளில்
திருமண வாழ்க்கை, வெளிநாட்டு வாழ்க்கைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கும் நியமனம் கிடைத்தவர்களுக்கே மீண்டும் நியமனம் கொடுத்தா எப்படி கடிதத்தை பெற்றுக்கொள்வார்கள்

எத்தனை எத்தனை பட்டதாரிகள் எங்கேயாவது எங்களுக்கு வேலை கிடைக்காதா இனியாவது எம் வறுமை நிலை தீராதா என்று ஏங்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா.........
ஆமா...எப்படி தெரியும்
பட்டாத்தானே வலி புரியும்

அரச தொழிலை எதிர்பார்ப்பது காலம் காலமாக தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது
பட்டதாரிகள் இல்லை படிக்காதவன் கூட அரச வேலைதான் எதிர்பார்ப்பான்

இங்கே என்ன தனியார் தொழில் நிறுவனங்கள் போனவுடனே தூக்கி கதிரையில இருத்தி வேலை தந்திடுவார்கள் போல இருக்கிறதே ....
பட்டதாரிகள் தானே அரச தொழில் வந்தால் போயிடுவிங்கதானே என்று இருக்கும் தொழிலை கூட இல்லையென்று துரத்தி விடுவாங்க இதுதான் தனியார் நிறுவனங்கள்...
அதனால்தானே நிரந்தரமில்லாத தனியார் வேலைகளைவிட நிரந்தர அரச தொழிலை எதிர்பார்க்கிறார்கள்
இந்த உண்மையை யாராலும் மறுக்கமுடியுமா....?

இதிலே சொகுசு ஓய்வூதியம் .....!
அது சரி
காலையில் தொடங்கி மாலை வரை நடக்கும் வேலைகளை பார்த்தால் புரியும் எது சொகுசு என்று......
வேலை இல்லாமல் இருப்பவனுக்கு அல்ல கடும் வேலை செய்பவனுக்கும் தூக்கம் வரும்

இக் கரை மாட்டிற்கு அக்கரை பச்சைதான்

இது காலம் பூராவும் மறுக்கமுடியாத உண்மைதான்

அத்தோடு  சுயதொழில் முயற்சி எல்லாம் சரி சுயதொழில் செய்யிறதற்கு பணம் எந்த இடத்திலே பறித்து எடுக்க சொல்கிறார்கள்
படித்த கடன் கட்ட முடியவில்லையாம் இதில் சுயதொழில் கடன் என்று சொல்லி வங்கி முழுதும் விபரம் கொடுத்து வீட்டையும் அடகுவைத்து கடனாளி பட்டதாரிகள் என்று தூக்கில தொங்க விட எண்ணமோ என்னவோ.......

மேலும்

நல்ல தலைப்பு "பட்டதாரிகள் எனும் புறோயிலர்கள்".......
ஆமாம் ஆமாம் ....!
அரசியலாலும் பக்கச்சார்புகளாலும்
உட்பூசல்கள் வேலைவாய்ப்புகளாலும்
அடிபட்டு இரையாகிக்கொண்டிருக்கும்
ஒவ்வொரு பட்டதாரிகளும் நிச்சயம் புறோயிலர்கள்தான்

நீங்கள் உண்பதை நிறுத்துங்கள்
புறோயிலர்கள் சுதந்திரம் அடையும்
எதையும் தாக்குப்பிடிக்க தேவையில்லை

இங்கே மேலே குறிப்பிடப்பட்ட பத்திரிகை பதிவினிலே சொல்லப்பட்ட கருத்துக்கள் 100க்கு 20% வீத பட்டதாரிகளுக்கு பொருந்தலாம் ஆனால் 80% பட்டதாரிகளுக்கு சிறிதும் பொருந்தாது

இங்கே யாழ்குடா நாட்டு பட்டதாரிகளை மட்டுமே குறிவைத்த நோக்கம்தான் புரியவில்லை வேறு இடங்களில் பட்டதாரிகள் இல்லையோ

இங்கே இனியும் பட்டதாரிகளின் உணர்வு களில் விளம்பரம் தேடாதீர்கள்

நீங்கள் தூக்கி விடவேண்டாம்
வீழ்த்தி விட முயற்சிக்காதீர்கள்


.நன்றி
ரேகா.சி
(பட்டதாரிகள் சார்பாக)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.