ஏன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை குறி வைக்கின்றனர்..?

எத்தனையோ கட்சிகள் உண்டு.
எத்தனையோ தமிழர் விரோத கட்சிகள் உண்டு. இறுதிவரை தமிழர்களை  சித்திரவதை செய்த தமிழ்க்கட்சிகள் உண்டு. பேரினவாதகட்சிகள் உண்டு.

அப்படியிருக்க தமிழரசுக்கட்சி ஏன்  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்
தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியினை
மட்டும் குறிவைக்கின்றனர்?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய அரசியல்வாதிகளில் மிகச்சிறந்த  ஜனநாயகவாதி.
எவ்வித கறைபடிந்த செயல்களுடனும் தொடர்பற்றவர். எந்த  ஆயுத குழுக்களுடனோ அல்லது பேரினவாத சிங்கள அரசுகளுடனோ தொடர்பற்றவர்.

தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு  சரியான_நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்.

சிங்களத்தின் பேரம் பேசலிற்கு தலை நிமிர்ந்து தலைசாய்க்காதவர்...!

மாமனிதரின் புதல்வர், இறுதிவரை  தேசியத்தலைவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஒரே ஒரு  அரசியல்ப் பிரதிநிதி...!

அப்படி இருக்கின்ற ஒருவரை ஏன் தமிழரசுக்கட்சி எதிர்க்கின்றது?

இந்த கேள்வியை ஆராய்ந்தால் உண்மைகள் தெளிவாகும்....???

சிந்தியுங்கள் மக்களே....!!!
-ல.லகிந்தன்-

No comments

Powered by Blogger.