தாய்லாந்தில் மீண்டும் இராணுவ ஆட்சி அமையும் சாத்தியம்!!

தாய்லாந்து தேர்தலில் இராணுவ சார்பு அரசியல் கட்சி பெரும்பான்மையுடன் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ள தேர்தல் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் 8 வருடங்களுக்கு பின்னர் இடம்பெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது தேர்தலிலேயே இராணுவ சார்பு கட்சி அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலை வகித்துள்ளது.

94 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் இராணுவ சார்பு கட்சியான பாலாங் பிரசாரட் கட்சி 7 .69 மில்லியன் வாக்குகளை பெற்றுள்ளதோடு பிரதான போட்டி கட்சியான தாய் கட்சியின் பிரதான வேட்பாளர் 7.2 மில்லியன் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார் என தேர்தல் விசேட செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தியோகபூர்வ தேர்தல் அறிக்கை எதிர்வரும் 9ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.