கட்டுப்பணத் தொகையை சில்லறையாகக் கொண்டுவந்த சுயேட்சை வேட்பாளர்

நாடாளுமன்றத் தேர்தலில் தெற்கு சென்னை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட விரும்பிய ஒருவர், வேட்புமனுத் தாக்கலின்போது கட்டுப்பணத் தொகையான 25,000 ஆயிரம் ரூபாயை சில்லறையாக கொண்டுவந்த சம்பவம் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 ரூபாயும், சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10,000 ரூபாயும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது கட்டுப்பணமாக (டெபாசிட்) செலுத்தவேண்டும்.

இந்நிலையில், அம்மா மக்கள் தேசிய கட்சியின் நிறுவுனரான சென்னை மந்தவெளியைச் சேர்ந்த குப்பல்ஜி தேவதாஸ் (வயது-64) என்பவர் தென். சென்னை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட விரும்பினார்.

இதையடுத்து, சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி 13ஆவது மண்டல அலுவலகத்திற்கு இன்று (திங்கட்கிழமை) வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். அப்போது, கட்டுப்பணத் தொகை 25,000 ரூபாயை சில்லறைக் காசுகளாக எடுத்து வந்தார்.

முன்னதாக அவர், தான் கொண்டு வந்த சில்லறைக் காசுகளை செய்தியாளர்களிடம் காண்பித்தார். மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்தனர். இச்சம்பவம், மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“
Powered by Blogger.