மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்..!! காரணம் என்ன ?

பாடசாலை சாரணர் பயிற்சி முகாமில் மேற்கொண்ட கயிறு ஏறும் பயிற்சியை வீட்டுக் கூரையில் பரீட்சித்து பார்த்த பாடசாலை மாணவன் கயிறு இறுகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கம்பளை மீத்ததலாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது. கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி கற்று வந்த நிமோத் இசான் சந்திரரட்ண என்ற 14 வயது மாணவனே இவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை கழுத்தில் கயிறு இறுகி உயிரிழந்தார்.


 கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் சாரணர்களுக்கான பயிற்சி இடம்பெற்றது. இதில் பங்கெடுத்த மாணவன், மாலை 4 மணியளவில் மீத்தலாவ கரவலையிலுள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.

பாடசாலையில் பெற்ற கயிறு ஏறும் பயிற்சியை வீட்டு கூரையில் மேற்கொள்வதாக தாயாரிடம் கூறிய மாணவன், வீட்டில் அறையில் இந்த பயிற்சியை மேற்கொண்டார்.
மாணவன் அறைக்குள் கயிறு ஏறும் பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, தாயார் சமையலறைக்குள் சமையலில் ஈடுபட்டிருந்தார். அறைக்குள் சத்தம் எதுவும் வராமல் அமைதியாக இருந்ததையடுத்து, அறைக்குள் சென்று தாயார் பார்த்தபோதே, மாணவன் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.


 மாணவனை கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சட்டவைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, நேற்று முன்தினம் சனிக்கிழமை சடலம் கையளிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.