கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட நால்வர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இருட்டுமடுப்பகுதியில் கசிப்பு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வரை புதுக்குடியிருப்பு பொலீசார் 24.03.19 அன்று கைதுசெய்துள்ளார்கள்.


புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இருட்டுமடுப்பகுதியில் சட்டவிரோத மதுபானமான கசிப்பு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் செய்த முறைய்பாட்டினை தொடர்ந்து அந்த இடத்திற்கு சொன்ற புதுக்குடியிருப்பு பொலீசார் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட நால்வரை கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்த கசிப்பினையும் பறிமுதல் செய்துள்ளார்கள்.

இவர்களிடம் இருந்து 14 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.