சுற்றுலாத்துறை அழிவடைய வளங்களை சூறையாடுவதே காரணம்!! – சாகல

சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை அறியாது இந்நாட்டு மக்கள் இயற்கை வளங்களை அழிப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை, தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.


இதன் காரணமாக சுற்றுலாத்துறை முழுமையாக அழிவடையும் என்பதுடன் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சுற்றுலா துறையின் மூலமாக அதிகளவு வருமானம் ஈட்டப்படுகின்றது. அதுவே இத்துறையின் விசேட அம்சமாகும்.

இத்துறை மூலம் ஈட்டப்படும் வருமானம் பலரிடையே பிரிக்கப்படுகின்றது என்பதை மிரிஸ்ஸ பிரதேசத்தில் வாழும் இம்மக்கள் நன்கறிவார்கள். இது மக்களின் கரங்களிற்கு பணத்தை கொண்டுசெல்வதற்கான சிறந்த பொருளாதார முறையாகும்.

எம் நாட்டின் சுற்றுலாத்துறையை அபிவிருத்திச் செய்வதற்கு இந்நாட்டில் பல விதமான வளங்கள் காணப்படுகின்றன.

இவ்வளங்களை முழுமையாக அழிக்காது அவற்றை பாதுகாத்த வண்ணமே இத்துறையை அபிவிருத்திச் செய்ய வேண்டும். அதன் பொருட்டு அரசாங்கமும் மக்களும் செயற்பட வேண்டும்.

வளங்களை அழித்தால் அதன் மூலமாக குறுகிய கால இலாபத்தையே ஈட்ட இயலும். நாம் சுற்றாடலை பாதுகாக்கவில்லையாயின் இச்சுற்றுலா துறையை மேலும் முன்னோக்கி கொண்டுச்செல்ல இயலாது.

போதைப்பொருட்களால் இம்முழு பிரதேசத்தையும் அழித்தால் இத்துறையில் முன்னேற்றம் காண இயலாது.  அரசாங்கம் என்ற வகையில் இச்செயற்பாடுகளிற்கெதிராக நடவடிக்கையெடுப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.