புலம்பெயர்மக்கள் நேர்மையான அரசியலை ஆதரிக்க போகிறார்களா அல்லது சந்தர்ப்ப அரசியலுக்கு ஆதரவு கொடுக்க போகின்றார்களா?

முன்னாள் முதல்வர் ஈபிஆர்எல்எப்  குழுவை விட்டு வெளியே வரட்டும்
அண்மையில் ஈபிஆர்எல்எப் சுரேஷ் பேட்டி ஒன்றில் தேர்தலுக்காகத்தான் உதய சூரியன் சின்னத்தை பயன்படுத்தியதாகவும் இப்பொழுது அதோடு தொடர்பு இல்லை என்பது போலவும் பேட்டியளித்திருந்தார்.



இதே நிலமை முன்னாள் முதல்வருடன் கூட்டமைத்து தேர்தலில் போட்டியிட்ட  பின்  முன்னாள் முதல்வருக்கு கூறமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது.


அதேபோல கடந்த உள்ளுராட்சி தேர்தலில் ஈபிஆர்எல்எப் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி தனது சந்தர்ப்ப அரசியலுக்காக(இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க) தமிழ் போராட்டத்தை காட்டி கொடுத்து சர்வதேச அளவில் சிங்கள பேரினவாதத்திற்கு வக்காளத்து வாங்கிய  சங்கரியோடு கூட்டமைத்து தேர்தலில் போட்டியிட்டனர்.


பின்னர் வட்டார ரீதியில் தோல்விகளை சந்தித்தார் ஆனாலும் விகிதாசார முறையில் தமக்கு கிடைத்த குறுகிய ஆசனங்களை வைத்து ஐதேகட்சி சுதந்திரகட்சி மகிந்தவின் மொட்டுக்கட்சி ஈபிடீபி மற்றும் முஸ்லீம் கட்சிகளோடு இரவோடு இரவாக பேரங்களில் ஈடுபட்டு வவுனியாவில் உள்ள பல சபைகளிலும் போட்டியிட்டனர்.ஆனாலும் பல சபைகளில் தோல்வியும் தழுவினர் வவுனியா நகரசபையில் எட்டு ஆசனங்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை  மூன்று விகிதாசாரப் ஆசனங்களை கொண்ட ஈபீஆர்எல்எப் மேலே கூறப்பட்ட பேரினவாதம் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை கைப்பற்றியது

இதே போன்று முன்னாள் முதல்வருடன் இணைந்து ஆசனங்களை பெற்ற பின் அமைச்சுக்களை பெறுவதற்காக இவ்வாறான செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.


ஆக முன்னாள் முதல்வர் விலைபோகாதா கொள்கையுடன் பயணிக்கும் கட்சிகளோடு இணைந்து பயணிக்க போகின்றாரா?அல்லது சந்தர்ப்ப அரசியல்வாதிகளோடு பயணிக்கப்போகின்றாரா?


அதுமட்டுமல்லாது  அண்மைக்காலமாக கஜேந்திரகுமார் மீது சேறு பூசும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர் அவ்வகையில் புலம்பெயர் மக்களை கஜேந்திரகுமாருக்கு எதிராக திசை திருப்புதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.


அண்மையில் கூட சில ஊடகங்கள் விக்கியுடன கூட்டு. இணைந்தால்த்தான  புலம்பெயர் மக்களின் நிதிகிடைக்ககும் என மிரட்டல் தொணியில் அமைந்திருந்தது.எனவே புலம்பெயர்மக்கள் நேர்மையான அரசியலை ஆதரிக்க போகிறார்களா அல்லது சந்தர்ப்ப அரசியலுக்கு ஆதரவு கொடுக்க போகின்றார்களா?


எனவே இங்கு விக்கியுடன் கஜேந்திரகுமார் கூட்டு சேரவேண்டும் என்பதை விடுத்து கஜேந்திரகுமாருடன் விக்கி கூட்டு சேருவதற்காகன வழிமுறைகளை சாலப்பொருந்தும் விடயமாகும் தாயகத்தில் உள்ள் சிலர் குறிப்பாக யாழ் மற்றும் கொழும்பை மையப்படுத்தி பத்திரிகை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது அதிருப்தியான செய்திகளை புலம்பெயர் இணையத்தளங்களுக்கு அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இவ்வாறான விக்யுடன் சேராவிட்டால் புலம்பெயர் மக்களின் நிதி உதவி கஜேந்திரகுமாருக்கு கிடைக்காது என்ற அபத்தமான சிந்தனையை விடுத்து கஜேந்திரகுமாருடன் முன்னாள் இணைந்து செயலாற்றுவதற்கான வழிமுறைகளைத்தேட வேண்டும்

தொடரும்
ருத்திர தாண்டவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.