உலகை உலுக்கிய ஹேக்கிங் சம்பவங்கள்!!

உலகமே ஸ்தம்பித்த இந்த ஹேக்கிங்கை வெகு சுலபமாகத் தனது பதினைந்தாவது வயதில் நிகழ்த்திக் காட்டிவிட்டார் மைக்கேல் கால்ஸ். இதனால் கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
``மாஃபியா பாய்ஸ், தி மெலிஸா வைரஸ்!'' - உலகை உலுக்கிய ஹேக்கிங் சம்பவங்கள்
ஹேக்கிங் (Hacking) இன்றைய நவீன உலகத்தில் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது .எந்தவொரு ஆற்றலுக்கும் ஒரு எதிர்வினை ஆற்றல் உள்ளது போல் டெக்னாலஜியால் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் சில பிரச்னைகள் இருப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆரம்பக் காலத்தில் கணினியில் மட்டுமே இருந்த பிரச்னை நாளடைவில் செல்போனிலும் வந்துவிட்டது. நவீனம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் ஒரு சாதாரண தொழில்நுட்ப அறிவு இருப்பவரால் கூட எளிதாக அடுத்தவர்களின் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை ஹேக் செய்ய முடிகிறது.

ஹேக்கிங் என்றால் என்ன?

பொதுவாக ஹேக் செய்வதென்பது ஒரு சாதனத்தில் இருக்கும் தகவல்களை திருடுவதற்காகத்தான். கணினி கண்டுபிடித்தற்குப் பிறகுதான் ஹேக்கிங் ஆரம்பித்தது என நினைப்போம். ஆனால், அதற்கு முன்பாகவே ஹேக்கிங் இருந்துள்ளன. உலகப்போர் சமயங்களில் முக்கிய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் நடவடிக்கை பரவலாக மேற்கொள்ளப்பட்டது. இப்படி உரியவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் தகவல்களைத் திருடுவது 'ஹேக்கிங்' எனப்படுகிறது. இவ்வாறு ஹேக்கிங் செய்பவர்களை 'ஹேக்கர்கள்' என அழைக்கப்படுகிறார்கள். அதே சமயம் ஹேக்கர்கள் என்றாலே தீயவர்கள் அடுத்தவர்களின் தகவல்களைத் திருடுபவர்கள் எனத் தவறான கண்ணோட்டம் நமது சமுதாயத்தில் நிலவி வருகிறது. ஆனால், இன்று மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் பல வகையில் உதவி செய்பவர்களும் உள்ளனர். சில சமயம் தொழில்நுட்ப வழக்குகளில் காவல்துறையினருக்கு ஹேக்கர்கள் உதவி புரிகிறார்கள். இவ்வாறு தங்கள் தொழில்நுட்ப ஆற்றலை நன்முறையில் செயல்படுத்துபவர்கள் ETHICAL HACKERS 'எத்திக்கல் ஹேக்கர்ஸ்' என அழைக்கப்படுகிறார்கள்.

புல்வாமா தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஹேக்கர் குழு பாகிஸ்தான் இணையதளங்களை ஹேக்செய்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இன்று எத்திக்கல் ஹேக்கர்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது திறமை மிக்க நல்ல ஹேக்கர்களை போட்டி போட்டு கொண்டு வேலைக்கு எடுத்துக் கொள்கின்றன. ஆகையால்தான் பல முன்னணி நிறுவனங்களான பேஸ்புக், கூகுள் போன்றவை தங்களிடம் உள்ள தொழில்நுட்ப குறைகளைச் சுட்டிக்காட்டும் நபர்களுக்குப் பரிசுத்தொகை தருகின்றன. உதாரணமாக ஒருவர் ஃபேஸ்புக் கணக்கை ஹேக் செய்யமுடியும் எனக் கூறி ஹேக் செய்து காண்பித்தார். ஃபேஸ்புக் நிறுவனம் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக நல்ல சம்பளத்தில் தங்கள் நிறுவனத்தில் பணி வழங்கியது. இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்களைக் கூறலாம். எத்திக்கல் ஹேக்கர்ஸ் (Ethical Hackers) ஆக உருவாக நினைப்பவர்களுக்கு ஹேக்கிங் சம்பந்தமான படிப்பை இந்தியாவின் பல கல்லூரிகள் மற்றும் தனியார் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் வழங்குகின்றன.

உலகை மிரளவைத்த ஹேக்கிங் சம்பவங்கள் 

மாஃபியா பாய்



கனடாவைச் சேர்ந்த 'மைக்கேல் கால்ஸ்' என்பவரின் பெற்றோர் இவருக்கு ஐந்து வயதான போது பிரிந்துவிட்டனர். பின்னர் தாயுடன் வசிக்க ஆரம்பித்த கால்ஸை பார்க்க அவரின் அப்பா இரண்டொரு வாரத்திற்கு ஒரு முறை வருவார். சிறுவனான கால்ஸ் தனிமையினால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த இவரின் தந்தை இவருக்கு ஆறு வயதான போது ஒரு கம்ப்யூட்டர் ஒன்றைப் பரிசளிக்கிறார். அன்று முதல் கணினியை வெறித்தனமாக கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார். இவருடைய பதினைந்தாவது வயதில் நாம் ஏன் ஹேக்கிங் செய்யக்கூடாது எனக் கேள்வி எழப் பள்ளி மாணவனான கால்ஸின் கண்கள் YAHOO-வின் மீது விழுந்தன. உடனே, தனது கணினி அறிவைப் பயன்படுத்தி YAHOO, CNN, AMAZON, eBAY நிறுவனங்களின் இணையதளங்களை 2000ம் ஆண்டு ஹேக் செய்து விட்டார். உலகமே ஸ்தம்பித்த இந்த ஹேக்கிங்கை வெகு சுலபமாகத் தனது பதினைந்தாவது வயதில் நிகழ்த்திக் காட்டிவிட்டார் மைக்கேல் கால்ஸ். இதனால் கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் கூட்டு முயற்சியால் பிடிபட்டார்.

தி மெலிஸா வைரஸ்

1999ம் ஆண்டு நியூஜெர்சியை சேர்ந்த ஒருவர் உருவாக்கிய வைரஸ்தான் மெலிஸா (MELISSA VIRUS) இமெயில் மூலம் வெகு வேகமாகப் பரவியது இந்த வைரஸ். 'முக்கியமான மெசேஜ் உங்களுக்கு மிகவும் தெரிந்தவரிடம் இருந்து வந்துள்ளது' என்ற மெயிலின் அலுவலக கணினிகள் வீட்டு உபயோக கணினிகள் என அனைத்திலும் பரவியது. முக்கியமாக மைக்ரோசாப்ட் வோர்டு மற்றும் அவுட்லுக் ப்ரோக்ராம்களை இது குறிவைத்தது. உலகின் 20 சதவீதக் கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டன.

எம்.டி.காஃஸ்

பிட்காயின் (BITCOIN) உலகளவில் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பணம். வடிவமற்ற இப்பணத்தை 2011-ம் ஆண்டு M.T.GOX என்ற கோட்நேம் கொண்ட நபர் ஹேக்கிங் செய்தார். ஒரு மிகப்பெரிய பிட்காயின் பரிவர்த்தனை போது 70 சதவிகிதம் அளவிற்கு வளைத்து விட்டார். முதலீட்டாளர்கள் அனைவரும் ஒருசேரப் பதறத் துரிதமான நடவடிக்கையால் மிக விரைவாக பிட்காயின்கள் அவரிடமிருந்து மீட்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த நபர் சம்பாதித்த பணம் கிட்டத்தட்ட 350 மில்லியன் டாலர்கள்.

சோனி பிக்சர்ஸ் ஹேக்

2014-ம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் நிறுவனம் 'தி இன்டர்வியூ' (The interview) என்ற திரைப்படத்தை எடுத்தது. இதில் வடகொரியா நாட்டின் அதிபர் கிம்ஜாங்யூன் விமர்சிக்கப் பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இப்படத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தது வடகொரியா. ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல் சோனி பிக்சர்ஸ் தனது பட வேலைகளைத் தொடர்ந்தது. ஒருநாள் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கணினியும் ஹேக் செய்யப்பட்டவுடன் கதிகலங்கி விட்டது சோனி நிறுவனம். இறுதியாகப் பட வெளியீட்டைத் தள்ளிவைத்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.