யாழ் மக்களுக்கு விரைவில் தீர்வு-ஆளுநர்!!

தனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு விடயத்துக்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்கின்றார்கள். இதுவரைக்கும் எனக்கு எதிராக யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களின் 217 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் 2 வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ளார். அந்நிலையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வாறாக நாம் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.