இலங்கை ராணுவமும் சர்வதேசமும்!!!

இலங்கை இராணுவத்தை சர்வதேச ரீதியாக மீண்டும் காட்டிக்கொடுத்த இவ் அரசாங்கத்தின் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றில் நேற்று (26) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்;இந்த நாட்டின் இராணுவம் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றத்தான் போரிட்டார்கள்.

 ஆனால், தற்போதைய அரசாங்கம் இராணுவம் போரிட்டமையானது கடந்த அரசாங்கத்தின் தேவைக்காக என கருதுகிறது.இராணுவத்தை ஏன் பழி வாங்குகிறார்கள் என்பதுதான் எமக்கு புரியவில்லை.

 ஜெனீவாவின் தீர்மானத்துக்கு அமைய பார்க்கும்போது, இந்த அரசாங்கமானது நாட்டுக்கு எதிரான ஒன்றாகவே கருதப்படுகிறது எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.