போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிங்கள பாடகர் கைது!!

போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியான மாகந்துரே மதுஷுடன் துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சிங்கள பாடகரான அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேரா உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இருவரும் இன்று (புதன்கிழமை) காலை இலங்கைக்கு வந்தனர். அப்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேர் அண்மையில் துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில் அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மாகந்துரே மதுஷ் உடன் நெருங்கிய தொடர்பினை பேணி வந்த அவரது சகாக்கள் தொடர்ச்சியாக நாட்டின் பல பகுதிகளிலும் கைதாகி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.