பனை பொருளாதாரம் நம்மைக் காப்பாற்றும்!

பனை’ சதீஷுடன் ஓர் உரையாடல் – 2: நரேஷ்

பனை சதீஷுடனான உரையாடல் தொடர்கிறது...
“ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு இயல் தாவரம் இருக்கும். அது அந்த மண்ணோட இயல்புலையே இருந்து அதை பாதுகாக்கும். ஆனா, எல்லா நிலங்களிலும் காணப்படுற மரம்தான் பனை. கஜா புயல்ல பாத்தீங்கன்னாகூட பனை மரங்களை விட பிற மரங்கள்தான் அதிகமா விழுந்துச்சு. அந்தந்த நிலத்தோட மரங்கள்கூட விழுந்தது. ஆனா பனை விழல. பனை எல்லா நிலத்துக்குமானது. அதனாலதான் அதை ‘மீட்பர்’னு சொல்லுறோம்.” என்று தொடங்கினார்.
“50 மில்லியன் வருடங்களுக்கு முன் ஆர்டிக் பிரதேசத்தில் பனை வளர்ந்ததற்கான சான்றை சமீபத்தில்தான் நேஷனல் ஜியாகிரபி இணைய தளத்தில் படித்தேன். பனை ஒரு குறிப்பிட்ட நிலத்திற்கான மரம் அல்ல. அது ஒட்டுமொத்த நிலவியலுக்கான அடையாளம் என்கிறது அந்தக் பனை’ சதீஷுடன் ஓர் உரையாடல் – 2: நரேஷ்
பனை சதீஷுடனான உரையாடல் தொடர்கிறது...

“ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு இயல் தாவரம் இருக்கும். அது அந்த மண்ணோட இயல்புலையே இருந்து அதை பாதுகாக்கும். ஆனா, எல்லா நிலங்களிலும் காணப்படுற மரம்தான் பனை. கஜா புயல்ல பாத்தீங்கன்னாகூட பனை மரங்களை விட பிற மரங்கள்தான் அதிகமா விழுந்துச்சு. அந்தந்த நிலத்தோட மரங்கள்கூட விழுந்தது. ஆனா பனை விழல. பனை எல்லா நிலத்துக்குமானது. அதனாலதான் அதை ‘மீட்பர்’னு சொல்லுறோம்.” என்று தொடங்கினார்.

“50 மில்லியன் வருடங்களுக்கு முன் ஆர்டிக் பிரதேசத்தில் பனை வளர்ந்ததற்கான சான்றை சமீபத்தில்தான் நேஷனல் ஜியாகிரபி இணைய தளத்தில் படித்தேன். பனை ஒரு குறிப்பிட்ட நிலத்திற்கான மரம் அல்ல. அது ஒட்டுமொத்த நிலவியலுக்கான அடையாளம் என்கிறது அந்தக் கட்டுரை.

“தமிழகத்தோட மாநில மரம் பனை. இந்தியா போன்ற நிலப்பரப்புல 5 கோடி பனை மரங்கள் இருக்கு. அதுல 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மரங்கள் தமிழகத்துலதான் இருக்கு. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்கள்லதான் பனை மரங்கள் பரந்து விரிந்திருக்கு. இந்த மரங்கள் அந்தந்த பகுதியில இருக்க மக்களுக்கு மண் சார்ந்த பொருளாதாரத்தை உறுதி செஞ்சது. அப்படி பாத்தா தமிழகம் மற்றும் இலங்கையின் வடகிழக்கு மாகாணங்கள்ல எல்லாம் பனைதான் பொருளாதாரமே..! பனையை மீட்பதுங்கிறது பொருளாதாரத்தையும் சேர்த்து மீட்பதுதான்!”

பனை விதைகளை விதைப்பதனால மட்டும் பனையை மீட்டுவிட முடியுமா?

நிச்சயமா முடியாது. எங்களோட பனை விதைப்புப் பயணம் என்பது பனை மரங்களை விதைப்பதற்கானதல்ல. அந்த விதைப்பின் மூலமா மக்கள்கிட்ட அந்த மரம் குறித்தும் அவங்க மரபு குறித்தும் எடுத்து சொல்லணும் என்பதற்காக. பனை மரம் என்பது வெறும் நுங்குக்கானதும் பதனிக்கானதும் மட்டுமில்ல என்பதையும், அவங்களோட ஒட்டுமொத்த பொருளாதாரத்தோட தொடர்புடையது என்பதையும் புரியவைப்பதற்கான பயணம்தான் எங்களுடையது. அதுவும் நாங்க புதுசா எதையும் சொல்லல. அவங்க மறந்துபோன விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்துறோம். அவ்வளவுதான்.

இதனால என்ன நடக்கும்னு நினைக்குறீங்க?

நம்ம வருங்காலத்துக்கு என்ன குடுக்கப்போறோம்னு ஒண்ணு இருக்கு. கண்டிப்பா அவங்களுக்கு பீட்ஸாவும் பர்கரும் கொடுக்கப்போவதில்ல. அதைவிட ருசியான ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் நம்மகிட்ட இருக்கு. மண் சார்ந்த, இயற்கையுடன் இணைந்த தொழில்நுட்பம் நம்மகிட்ட இருக்கு. இது இன்றைய நிலமையா மாத்துமான்னு எனக்கு தெரியாது. ஆனா வருங்காலத்துக்கு இதுதான் வேர்னு மட்டும் எனக்கு தெரியும்.

பனை சதீஷுக்கான விதை எங்கே ஊன்றப்பட்டது?

நெசவும் விவசாயமும் உயிர் நாடியா இருக்க முள்ளிப்பட்டுங்குற கிராமம்தான் என் ஊரு. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பக்கத்துல இருக்க ஊரு. எங்கப்பா பாரம்பரிய பட்டு நெசவுத் தொழிலாளி. வழக்கம்போலப் பள்ளி படிப்பு, கல்லூரிப் படிப்பு முடிச்சு வேலைக்கு போயிட்டு இருக்க சாதாரண ஐ.டி. ஊழியன் நான். இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தப்பதான் நிறைய விஷயம் தெரியவந்தது. அந்தப் போராட்டத்துல இருக்க அரசியல் பத்தி நான் பேசல. அந்தப் போராட்டம் எனக்குக் கத்துக்குடுத்த அரசியல் பத்தி பேசுறேன். அந்தப் போராட்டத்தப்போதான் நாம நம்மளோட இயற்கை வாழ்வியலை, செல்வங்களை எவ்வளவு வேகமா இழந்துட்டு வர்றோம்னு புரிஞ்சது. இன்னும் காத்துட்டு இருந்தா நாம எல்லாத்தையும் இழந்துடுவோம்னு புரிஞ்சது. வாழ்வியல கத்துக்குடுக்காம குழந்தைகளுக்கு வேற எதை கத்துக்குடுக்க போறோம்? பள்ளி போகட்டும், கல்லூரி போகட்டும், படிக்கட்டும். ஆனா வாழ்வியல் தெரியாம இதையெல்லாம் படிச்சு ஒரு பிரியோஜனமும் இல்லங்கிறத என் அனுபவத்துல புரிஞ்சுக்கிட்டேன்.

பனை பயணத்துனால பயன் இருக்கா?

எங்களால நம்ப முடியாத அளவுக்கான பயன் இருக்கு. போற இடத்துல எல்லாம் மக்கள் ரொம்ப ஆர்வமா தங்களோட பாரம்பரியத்தைப் பகிர்ந்துக்கிட்டாங்க. நாங்க அவங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போனோம், ஆனா அந்த மக்கள் மூலமா நாங்க அடைஞ்ச விழிப்புணர்வுதான் அதிகம். நாங்க நகரங்களுக்கு போகல. கிராம சாலைகளையும் கடந்து கிராமங்களுக்கு உள்ள போனாம். ஏன்னா அவங்கிட்டதான் பேச வேண்டியிருக்கு. யார் தொலைச்சாங்களோ, அவங்ககிட்ட இருந்துதான் தேடல ஆரம்பிக்கணும். அவங்கதான் கருப்பட்டியையும் பதநீரையும் பயன்படுத்தியிருக்காங்க. அவங்ககிட்டதான் அதை திரும்ப கேக்கணும். அந்தப் பயணத்துக்கு அப்றம்தான் சமூகத்தை பத்தின புரிதல் கிடச்சது. பனையை மக்கள்கிட்ட எப்படி கொண்டுபோறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். மக்கள் தயாரா இருக்காங்க. அவங்களை முன்னெடுத்துக் கொண்டு போற வழிகாட்டுதுலக்காக காத்திருக்காங்க.

மக்கள் தயாரா இருக்காங்க சரி. அரசாங்கம்?

அரசாங்கத்தின் சார்பா KVICனு சொல்லப்படுற, பனை பொருட்களையும் கைவினப் பொருட்களையும் விற்பனை செய்யும் ‘கதர் கிராம வாரியம்’ எல்லாம் இருக்கு. ஆனா அவை முழுமையான செயல்பாட்டுல இல்ல. அந்த வாரியத்தின் மூலமா இந்தியா முழுக்கவும் பனை பொருட்களை கொண்டு போகலாம். ஆனா, அது செயல்பாட்டுல இல்ல. அரசாங்கத்துகிட்ட நாங்க கேக்குறதெல்லாம், பனை தோப்பாக இருக்குற இடத்துல எல்லாம் இயற்கை தொழிற்சாலைகள் ஆரம்பிங்க. இன்னும் எளிமையா சொல்லனும்னா, பனை பொருளாதாரத்தை ஊக்குவிக்கணும். கிராமப் பொருளாதாரம் உறுதி செய்யப்பட்டாலே பல பிரச்சினைகள் முடிஞ்சிரும்.

கிராமப் பொருளாதாரத்துல மிகப் பெரிய பங்கு வகிப்பது பனைதான். பனை ஒரு கற்பகத் தரு. பனையில பயன்படாத பொருள்னு எதுவுமே இல்லை. நம்ம பாதை தெளிவானதாவும் தீர்கமானதாவும் இருந்தா, நம்மால செய்ய முடியாதது எதுவும் இல்ல.

வேற எதும் சொல்ல விரும்புறீங்களா?

பனை வெல்லட்டும்..!

சதீஷின் பனை பயணம் தொடர்கிறது. சென்னையின் மிக முக்கிய இயற்கை அரணாகவும், சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆதாரமாகவும் விளங்கும் கொற்றலை, ஆரணி ஆகிய ஆறுகளின் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், அங்குள்ள பனைக் காடுகளைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வுப் பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் பனை சதீஷ்.

மார்ச் 31 அன்று எண்ணூரிலிருந்து பழவேற்காடு வரை (40 கிமீ) மிதிவண்டிப் பயணம் நடைபெறவிருக்கிறது. காலை 6.30 மணிக்கு இது தொடங்குகிறது. இந்த மாதத்தில் இது இரண்டாவது பயணம் என்று சதீஷ் தெரிவிக்கிறார்..

மார்ச் 31 அன்று எண்ணூரிலிருந்து பழவேற்காடு வரை (40 கிமீ) மிதிவண்டிப் பயணம் நடைபெறவிருக்கிறது. காலை 6.30 மணிக்கு இது தொடங்குகிறது. இந்த மாதத்தில் இது இரண்டாவது பயணம் என்று சதீஷ் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.