சிறீமாவின் படத்தை திறந்து வைத்தார் கரு!!

மாற்றங்களை உருவாக்கிய இலங்கை பெண்களை கௌரவிக்கும் வகையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் உருவப்படங்கள் திறந்துவைக்கப்பட்டன.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் உருவப்படத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய திறந்து வைத்துள்ளார்.

1970-1977 வரை பிரதமராக சிறீமோவோ தமிழருக்கு இழைத்த கொடுரங்களை இங்கே தருகின்றோம்.குறிப்பாக செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்காக

1977ல் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழர் தாயகப்பகுதிகளில் பெருவெற்றி பெற்றதை அடுத்து சிறீமாவோ கலவரங்கள் மூட்டிவிடப்பட்டன அனுராதபுரம் தொடக்கம் கொழும்பு வரை தமிழர்கள் தாக்கப்பட்டு சுமார் 300பேர் கொல்லப்பட்டனர்.

1974ல் யாழ் தமிழராய்ச்சி மகா நாட்டில் ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட காரணமாக சிறீமோவோ இருந்தார்.

தரப்படுத்தல் சட்டம் கொண்டுவரப்பட்டு ஈழத்தமிழ் மாணவர்களுடைய கல்வி உரிமை பறிக்கப்பட்டது.

மணலாற்றில் இருந்து அம்பாறை வரையிலான தமிழர் தாயகப்பகுதிகளில் எற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்ட பௌத்த சிங்கள மயமாக்கலும் நில ஆக்கிரமிப்பும் துரிதப்படுத்தப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அவர்கள் குடியிருந்த தோட்டங்களில் இருந்து ஏதிலிகளாக இரவோடு இரவாக விரட்டியடிக்கப்பட்டார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“
Powered by Blogger.