சீனாவுடன் விரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை!- இலங்கை அமைச்சர் சீனா விஜயம்!!

சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை விரைவுபடுத்தும் வகையில் சீன உயர்மட்ட அதிகாரிகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.


அந்தவகையில், சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அடுத்தமாதம் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை எட்டுவது தொடர்பாக அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வகையிலேயே வர்த்தக அமைச்சரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

இந்நிலையில், சீன உயர்மட்ட அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் மூலம் கூடிய விரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.