தனுஷ் படம் தாமதமானது ஏன்?

தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இணைந்து உருவாகவிருந்த படம் தாமதமானது ஏன் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 50 நாட்களை நிறைவு செய்துள்ளது. வட சென்னை படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் பிஸியாக இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்கப்போவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இருவருமே அவரவர் படங்களில் பிஸியாகிவிட்டனர். இதனால் அவர்கள் இருவரும் இணைய வேண்டிய படம் கைவிடப்பட்டுவிட்டதாக சில செய்திகள் வெளியாகின.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசீனோவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டது. ஆனால் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இதனால் படம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இப்படத்திற்காக கதை எழுதும் பணிகளில் கார்த்திக் சுப்புராஜ் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். மேலும், இப்படத்தில் அல் பசீனோவை நடிக்க வைக்க படக்குழு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நியூ யார்க் நகரில் படமாக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.