இந்த வாரப் படங்கள் நிலை என்ன?

தமிழ் சினிமாவில் பல வருடங்களாகப் படங்களை இயக்காமல் இருந்த இயக்குனர் சேரன் கதை வசனம் எழுதி இயக்கி நடித்துள்ள திருமணம், அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள தடம், சாருஹாசன் நடித்துள்ள தாதா, புதுமுகங்கள் நடித்துள்ள பிரிவதில்லை, விளம்பரம், படத்தின் டிரெய்லர் வெளியான நாள் முதல் இன்று காலை திரையரங்குகளில் திரையிடப்படும் வரை எதிர்பார்ப்பையும் கடுமையான எதிர்ப்புகளையும் சம்பாதித்த 90 ML ஆகிய ஆறு படங்கள் இன்று ரிலீஸாகின.
சிம்பு இசை, ஓவியா கதாநாயகி, டிரெய்லரில் வரம்பு மீறிய காட்சிகள் என்பதால் இளைஞர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் அதிகமான திரையரங்குகள் இப்படத்திற்கு கிடைத்தன. தடம் த்ரில்லர் படம் என்பதாலும் முன்னணி விநியோகஸ்தர்கள் இப்படத்திற்கு தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யும் பொறுப்பில் இருந்ததாலும் 250க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் வரை இப்படம் வெளியானது.
தமிழ் சினிமாவிற்கு தேசிய அளவில் கெளரவம் தேடித் தந்த சேரன் இயக்கத்தில் வெளியான திருமணம் படத்திற்குக் குறைவான தியேட்டர்களே கிடைத்திருக்கின்றன.
மற்ற மூன்று படங்களும் பெயரளவுக்கு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.
வணிக ரீதியாக எதிர்பார்க்கப்பட்ட 90 ML, தடம், திருமணம் ஆகிய மூன்று படங்களுக்கும் தியேட்டரில் ஓப்பனிங் இல்லை.
சினிமாவில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திரைப்படங்கள் வாங்குவதை விநியோகஸ்தர்கள் விரும்ப மாட்டார்கள். பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்கு ஓப்பனிங் இருந்தாலும், குறைந்தபட்ச வசூல் தான் இருக்கும். எனவே, இது மாதிரியான படங்கள் வெற்றி பெறுவது கடினம் என்கிறார் விநியோகஸ்தர் சண்முகம். பள்ளி இறுதியாண்டுத் தேர்வு, கடுமையான வெயில் இவற்றைக் கடந்து தியேட்டருக்கு ஆடியன்ஸ் வர மாட்டார்கள் என்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று வெளியான படங்களுக்கான முன்பதிவு 15%-ஐக் கடக்கவில்லை . சினிமா விநியோகஸ்தர்கள் மத்தியில் ‘பிப்ரவரியில் படம் வாங்குனவன் பிச்சை எடுப்பான். மார்ச்ல ரிலீஸ் செய்பவன் மரண அவஸ்தையை அனுபவிப்பான்’ என ஒரு பழமொழி கூறப்படும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.