ஜிஎஸ்டி.யை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம்-பிரேமலதா!!

ஜிஎஸ்டி வரிவிகிதங்களை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்.

கோவை, கணபதி பகுதியில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரேமலதா வியாழக்கிழமை பேசியதாவது:
திமுக கூட்டணி வேட்பாளர் முன்வைப்புத் தொகையை வாங்க முடியாத அளவுக்கு, சிறப்பான வெற்றியை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவை மக்கள் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, நதிநீர் இணைப்பை சாத்தியப்படுத்து வோம். பிரதமர் மோடி தலைமையில் தற்போது நடைபெறும் ஊழலற்ற ஆட்சியைத் தொடர்ந்து வழங்குவோம். இலங்கையில் தமிழர் இனப்படுகொலைக்குக் காரணமான திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு இத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பற்றி வர்த்தகர்கள் கவலைப்பட வேண்டாம். இதை மறுபரிசீலனை செய்யுமாறு புதிதாகத் தேர்வு செய்யப்படும் தமிழக எம்பி -க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம். ஜிஎஸ்டி தொடர்பாக பிரதமர் மோடியிடம் கண்டிப்பாகச் சொல்வோம் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.