யாழில் நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணி தொடர்பாக யாழ் பல்களையில் ஊடக சந்திப்பு.!

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி எதிர்வரும் 16.03.2019 அன்று செவ்வாய்க்கிழமை யாழில் இடம்பெறவிருக்கும் மாபெரும் பேரணி தொடர்பாக யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக சந்திப்பொன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று இடம்பற்றது.


ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40 வது அமர்வில் சிறீலங்கா அரசிற்கு போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் கால நீடிப்பு வழங்கக்கூடாது என்றும், இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்று பத்தாண்டுகள் கடந்தும் இதுவரைக்கும் நீதி கிடைக்கவில்லை அதேவேளை ஐ.நா வோ சிறீலங்கா அரசிற்கு காலநீடிப்பு வழங்கிய வண்ணமுள்ளது. இனியும் காலநீடிப்பு வழங்காது சர்வதேச விசாரணையை நடத்தவேண்டும். காலம் கடந்த நீதி நீதியாக இருக்காது என்றும் கூறியதோடு எமது மக்களிற்கான சரியான உண்மையான நீதிவேண்டும் என்பதனை வலியுறுத்தி எதிர்வரும் 16 ம் திகதி வடக்குகிழக்கு மாணவர் சமூகத்தினரால் மாபெரும் கண்டனப்பேரணி நடத்த  இருப்பதாகவும அதற்கு அனைத்து தமிழ் உறவுகளும் ஆதரவு வழங்குவதோடு நடைபெறும் போராட்டத்தில் தாங்களும் கலந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர்களான  கல்விசார ஊழியர் சங்கம். ஜனநாயக ஊழியர் சங்கம்.ஆசிரியர் சங்கம்.  மாணவர் ஒன்றியம் என அனைவரும் எல்லோரையும் அழைப்பதோடு ஐ.நாவுக்கும் தமது கண்டனத்தினை தெரிவிக்கின்றார்கள்....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.