ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது-செ.கஜேந்திரன்!

பொறுப்புக்கூறல் விடயத்தில் ஆக்கபூர்வமாக எதையும் செய்திருக்காத நிலையில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஆக்கபூர்வமாக எதையும் செய்திருக்காத நிலையில் பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரை செய்கின்ற வகையில் இவர்களுடைய அறிக்கை அமைய வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. எனினும்  இவரது அறிக்கை அவ்வாறான பரிந்துரைகளைச் செய்யாதது எமக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது”

 அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

No comments

Powered by Blogger.