ஷியோமியின் சார்ஜிங் தொழில்நுட்பம்!!

இன்றைக்கு ஸ்மார்ட்போன்களில் பட்டரியின் அளவு என்பது சற்று அதிகமாகவே இருக்கிறது.
அதிக நேரம் சார்ஜ் நிற்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் விரும்புவதால் மொபைல் நிறுவனங்கள் பேட்டரியின் அளவை அதிகமாகக் கொடுக்கின்றன. ஆனால், இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. பேட்டரியின் திறன் அதிகம் என்பதால் இதற்கு சார்ஜ் ஏறுவதற்கான நேரமும் அதிகமாகத் தேவைப்படும். சில ஸ்மார்ட்போன்கள் இரண்டு மணி நேரம் வரை சார்ஜ் ஏறும். இந்த நேரத்தைக் குறைக்கும் வகையில் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பல ஸ்மார்ட்போன்களில் தரப்பட்டது.

அதற்கு ஏற்ற சார்ஜரைப் பயன்படுத்தும்போது குறைவான நேரத்திலேயே பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆகும். அண்மையில் ஓப்போ நிறுவனம் Super VOOC என்ற சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது. இதன் மூலமாக முப்பத்தைந்து நிமிடங்களில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும் என ஓப்போ தெரிவித்திருந்தது. இப்பொழுது அதை மிஞ்சும் வகையில் ஷியோமி நிறுவனம் 100W டர்போ சார்ஜிங் வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் ஒரு பக்கம் 4000mAh பேட்டரியைக் கொண்ட ஷியோமி ஸ்மார்ட்போனும் அருகில் 3700 mAh திறன் கொண்ட ஓப்போ ஸ்மார்ட்போன் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

 பின்னர் சார்ஜ் ஏறத் தொடங்கியவுடன் ஷியோமி மொபைல் வெறும் 17 நிமிடங்களில் 0-100 % பேட்டரி சார்ஜ் ஏறுகிறது. அதேநேரம் ஓப்போ மொபைலில் 65% மட்டுமே சார்ஜ் ஏறுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைக் கூடிய விரைவில் ரெட்மி ஸ்மார்ட்போன்களில் ஷியோமி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.