இரட்டைக் குழந்தை! மகிழ்ச்சியில் பிரஜின் - சாண்ட்ரா தம்பதி!!

'காதலிக்க நேரமில்லை' சீரியலின்மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரஜின். இவருடைய காதல் மனைவி நடிகை சாண்ட்ரா.
இருவரும் வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம்வந்தார்கள். தற்போது பிரஜின், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் 'சின்னதம்பி' சீரியலின் நாயகனாக நடித்துவருகிறார்.

கடந்த காதலர் தினத்தன்று பிரஜின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'இந்தக் காதலர் தினம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், நான் அப்பாவாகவும், என் மனைவி அம்மாவாகவும் ஆகப்போகிறோம். எங்களுடைய பயணம் தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றன. தோழியாக, மனைவியாக, விமர்சகராக, தாயாக என் மனைவி இருந்திருக்கிறார். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அந்த வரம் எனக்கு அதிகமாகவே இருக்கு' எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில்,  இந்தத் தம்பதிக்கு அழகான இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன எனத் தகவல் வெளிவந்துள்ளது. தாயும்,  குழந்தைகளும் நலமாக இருப்பதாக பிரஜினின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்த்துகள் பிரஜின் - சாண்ட்ரா
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

Powered by Blogger.