சிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட புனித அல்குர்ஆன் நூலை வெளியிடும் விழா!!

சிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட புனித அல்குர்ஆன் நூலை வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவானது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (07) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


இஸ்லாத்தின் வரலாறு தொடர்பில் புரிந்துகொள்வதற்கும் முஸ்லிம் மக்களின் கலாசாரம் மற்றும் மத பின்புலம் தொடர்பில் ஏனைய மதத்தினரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு மொழிபெயர்ப்புக்கு அப்பாற்பட்டு சரளமான சிங்கள மொழியில் அல்குர்ஆனை மொழிபெயர்த்திருப்பது சிறப்பம்சமாகும்.

இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சிங்களத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புனித அல்குர்ஆனின் முதலாவது பிரதியினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்செய்க் றிஸ்வி முப்தி ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

இஸ்லாமிய மத தலைவர்களும் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ.முபாறக் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.