அடுத்த படத்தை அறிவித்த பாலிவுட் 'குயின்' !!

நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


தேசிய விருது வென்ற நாயகி 
kangana
நடிகை கங்கனா ரனாவத்  பாலிவுட்   நடிகைகளில் முக்கிய இடத்திலிருந்து வருகிறார்.  இந்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வெளியான படம் 'குயின்'. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கங்கனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. 
சுயசரிதை
kangana
இதையடுத்து இயக்குநர்   க்ரிஷ் இயக்கத்தில் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு வெளியான மணிகர்ணிகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கங்கனா இணை இயக்குநராக பணியாற்றினார் . இதை தொடர்ந்து தன்னுடைய சுயசரிதை படம் விரைவில் வெளியாகும் என்றும் கங்கனா கூறியிருந்தார்.
இயக்குநராக களமிறங்கும் கங்கனா 
kangana
இந்நிலையில் கங்கனா ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இதிகாசக் கதையாக எடுக்கப்படவுள்ள இந்த படத்திற்கு கால அவகாசம் அதிகம் எடுக்கும் என்பதால், அதை நிறுத்தி வைத்துள்ளோம். படத்திற்கான போட்டோஷூட்டை திட்டமிட்டுள்ளோம். விரைவில் போஸ்டர் வெளியிடப்படும்' என்றும் கூறியுள்ளார். 
முன்னதாக தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரனாவத் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம்  இந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.  இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Powered by Blogger.