ஜேர்மனியில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் உதவும் நீல அட்டை குறித்த சில தகவல்கள்!!

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத மக்கள் ஜேர்மனியில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் உதவும் நீல அட்டை குறித்த சில தகவல்கள்… நீல அட்டை என்பது என்ன? அமெரிக்காவில் வாழ்வோர் பணி புரிவதற்கான முழு உரிமைகளை வழங்கும் கிரீன் கார்டைப் பார்த்துதான் ஜேர்மனியும் இந்த நீல அட்டை என்னும் திட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால் கிரீன் கார்டைப்போல் இல்லாமல், நீல அட்டை வைத்திருப்போர், தாங்கள் தங்கள் நாட்டில் வாங்கும் சராசரி சம்பளத்தை விட 1.5 மடங்கு அதிக சம்பளம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். நீல அட்டை பெறுவதற்கு என்ன தேவை? முறையான பல்கலைக்கழக பட்டம் பெற்று நல்ல சம்பளம் பெறுபவர்களுக்கு நீல அட்டை வழங்கப்படும். எனவே நீங்கள் நீல அட்டை பெற விண்ணப்பிப்பதற்கு முன் உங்கள் கையில் வேலைக்கான உத்தரவு ஒன்று தயாராக இருப்பது அவசியம். நீல அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? நீங்களோ அல்லது உங்களுக்கு வேலை வழங்குபவரோ நீல அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, அத்துடன் தேவையான ஆவணங்களை ஜேர்மனியிலுள்ள வெளியுறவு அலுவலகத்திலோ அல்லது உங்கள் நாட்டிலுள்ள தூதரகத்திலோ விண்ணப்பிக்க வேண்டும். அவுஸ்ரேலியா, கனடா, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டவர்கள் மூன்று மாத சுற்றுலா விசா பெற்று ஜேர்மனிக்கு வந்த பின் விண்ணப்பிக்கலாம். ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஏற்கனவே வாழிட உரிமம் பெற்று ஜேர்மனியில் வாழ்பவர்கள் இல்லை என்றால், தங்கள் நாடுகளிலுள்ள தூதரக அலுவலகத்திலேயே விண்ணப்பிக்க வேண்டும். விரைவு வாழிட உரிமம் நீங்கள் நீல அட்டை வைத்திருப்பவரானால், 33 மாதங்களுக்குப்பின் நிரந்தர வாழிட உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். உங்களிடம் B1 மொழிச் சான்றிதழ் இருந்தால் இந்த கால கட்டம் 21 மாதங்களாக குறைக்கப்படும். ஏனைய நாடுகளில் நீங்கள் வாழ்ந்த காலகட்டமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஏனைய ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத வாழிட உரிமம் வைத்திருப்போர், ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். இது ஜேர்மனியில் வேலை செய்வதற்காக மட்டும் அல்ல, ஜேர்மனியில் வேலை செய்யத்தொடங்கி 18 மாதங்கள் ஆகிவிட்டதென்றால் நீல அட்டை வைத்திருப்பவர்கள் எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்கும் செல்லலாம். டென்மார்க், அயர்லாந்து மற்றும் பிரித்தானியாவுக்கு மட்டும் நீங்கள் செல்ல முடியாது. குடும்ப உறுப்பினர்களுக்கும் முழு உரிமை நீல அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமின்றி, அவர்களது துணைவர் மற்றும் குழந்தைகளும் ஜேர்மனியில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.