சிதம்பரம் இளைஞரின் சாதனை விழிப்புணர்வு!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன் 1 கிராம் 420 மில்லி தங்கத்தில் இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைப்பு செய்து சாதனை படைத்துள்ளார்.

சிதம்பரம் விஸ்வநாதன் தெருவில் வசிப்பவர் பொற்கொல்லர் ஜெயபால். இவரின் மகன் முத்துக்குமரன்.  9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தன் தந்தையுடன் சேர்ந்து கவரிங் மற்றும் தங்க நகை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஏதாவது சாதிக்க வேண்டும் என ஓய்வு நேரத்தில் குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு சிறிய பொருள்களை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்பொழுது 1 கிராம் 420 மில்லி தங்கத்தில் நாடாளுமன்ற கட்டட வடிவமைப்பை உருவாக்கியுள்ளார். மேலும், தங்கத்தில் பெண் குழந்தை 100 சதவிகித ஓட்டை வலியுறுத்தியும், ஓட்டு விற்பனை இல்லை என ஆங்கிலப் பதாகையுடன் ஆன உருவத்தையும், 20 மில்லி தங்கத்தில் மை வைத்த விரல் உருவத்தையும் செய்து சாதனை செய்துள்ளார். இவர் கடந்த 2018-ம் ஆண்டில் புகழ்பெற்ற மெக்கா, மதினா உருவங்களை 640 மில்லி கிராம் தங்கத்தில் 1 செ.மீ உயரத்திலும், அதனுடன் அல்லாஹ் வார்த்தை 10 மில்லி கிராம் தங்கத்திலும் செய்துள்ளார்.

மேலும், கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 850 மில்லி கிராம் தங்கத்தில்
`பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு உருவங்களைச் செய்துள்ளார். தொடர்ந்து புதுடெல்லி செங்கோட்டை, சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்சபை, தங்க ஊஞ்சல், தமிழக சட்டப் பேரவை முகப்பு, தாஜ்மகால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவம் என சிறிய அளவில் உருவங்களைத் தங்கத்தில் செய்துள்ளார். இவருக்கு அகில இந்திய நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் பொற்கொல்லர் மாமணி விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முத்துக்குமரன் கூறுகையில், ``சிறிய அளவிலான தங்கத்தை வைத்து உலகப்புகழ் பெற்ற இடங்கள், தலைவர்கள்,
அரசின் திட்டங்கள், கோயில் முதலியவற்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இவற்றைச் செய்துள்ளேன். இதுபோல மேலும், பல  வடிவமைப்புகளைச் செய்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்” என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.