கர்நாடகாவில் பிரசாரம் நிறைவு: 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு!!

கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இங்கு மொத்தம் 28 தொகுதிகள் காணப்படுகின்றன. முதற்கட்டமாக உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுர்கா, தும்கூரு, மண்டியா, மைசூர், சாமராஜ்நகர், ஊரக பெங்களூர், வட பெங்களூர், மத்திய பெங்களூர், தென் பெங்களூர், சிக்கபள்ளாப்பூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் காங்கிரஸ், பா.ஜ.க, மதசார்பற்ற ஜனதாதளம், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 241 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசார பணிகள் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வந்தன. வாக்குப்பதிவு நடைபெறும் 14 தொகுதிகளிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே கடைசி நேர பணப் பறிமாற்றத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனைச் சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.