வவுனியா வடக்குத்தவிசாளரின் சர்வாதிகாரப்போக்கிற்கு எதிராக முன்னணியின் முறைப்பாடு!!

வவுனியா வடக்குத்தவிசாளரின் சர்வாதிகாரப்போக்கிற்கு எதிராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் முறையீடு.

மேற்படி விடயமானது..

அவசர அமர்வு என பிரதேச சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு, வாக்கெடுப்பின் மூலம்  நிராகரிக்கப்பட்ட கூட்டறிக்கையை எந்தவித திருத்தங்களுமின்றி  தவிசாளர் தானே முன்மொழிந்து ஆளும்கட்சியின் உறுப்பினர் ஒருவர் வழிமொழிந்ததுடன் அமர்வு நிறைவு பெற்றதாக அறிவித்து தவிசாளர் எழுந்து வெளியே சென்றுள்ளார். அமர்வு ஆரம்பித்து ஐந்து நிமிடங்களுக்குள் கூட்டம்  முடிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி நிராகரிக்கப்பட்ட கூட்டறிக்கையை சர்வாதிகாரமாக நிறைவேற்றியது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து  முன்னணி உறுப்பினர் திரு.திருநாவுக்கரசு விஜீகரன் பேச எழுந்தபோது கூட்டம் நிறைவுற்றதாக கூறி தவிசாளர் வெளியேறியுள்ளார்.
சர்வாதிகாரத்தின் உச்சமான செயற்பாடு இது
Powered by Blogger.