சமூக ஆர்வலர் முகிலன் மீது இளம்பெண் பாலியல் புகார்!!
ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன்(48). சமூக ஆர்வலர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் தமிழக அரசு, போலீஸாருக்கு எதிராக விடியோ பதிவை வெளியிட்ட இவர் ரயிலில் மதுரைக்குச் செல்லும் வழியில் மாயமானார். இதுநாள் வரை காவல்துறையினர் முகிலயனைக் கண்டு பிடிக்க இயலவில்லை. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் ராஜேஸ்வரி (32) ஞாயிற்றுக்கிழமை குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், முகிலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார். முகிலனுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டுவந்த ராஜேஸ்வரி, தற்போது முகிலன் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கரூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு முகிலனுடன் வந்த ராஜேஸ்வரி உள்ளிட்டோர், குளித்தலை வதியம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்தனர்.அப்போது, அங்கு வந்த ராஜேஸ்வரியின் தாய், முகிலன் தனது மகளைக் கடத்தி வைத்திருப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை