ரசிகர்களுக்காக மீண்டும் நடிக்க வந்துட்டேன்!' - கருவாப்பையா கார்த்திகா!

2006-ம் ஆண்டு வெளியான 'தூத்துக்குடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், கார்த்திகா.
அந்தப் படத்தில் இடம்பெற்ற 'கருவாப்பையா' பாடல், மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலரானது. அந்தப் பாடலே கார்த்திகாவுக்கான அடையாளமாக மாறிவிட்டது. இதன் தொடர்ச்சியாக, இவர் நடித்துள்ள 'பிறப்பு' என்ற படத்தில் இடம்பெற்றுள்ள 'உலக அழகி நான்தான்' என்ற பாடலும் வைரலானது. 'மதுரை சம்பவம்', 'ராமன் தேடிய சீதை', 'தைரியம்' உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திகா, அதன் பிறகு சினிமாவைவிட்டு விலகி இருந்தார்.

இது குறித்து கார்த்திகாவைத் தொடர்புகொண்டு பேசினோம். "என் தங்கச்சியின் படிப்புக்காக இவ்ளோ வருடமா மும்பையில இருந்தேன். அவளுடைய படிப்பு முடிஞ்சிட்டதுனால இப்போ சென்னை வந்துட்டேன். 'கருவாப்பையா', 'உலக அழகி நான்தான்' இந்த ரெண்டு பாடல்கள்தான் என்னை மக்கள் மத்தியில கொண்டுபோய் சேர்த்தது. நான் சினிமாவைவிட்டு விலகி இருந்த சமயத்திலும் என்னை மக்கள் மறக்கலை. நிறைய மீம் எல்லாம் வந்துச்சு. அதையெல்லாம் பார்த்துட்டுதான் என் ரசிகர்களுக்காக மீண்டும் நடிக்க வரணும்னு முடிவு பண்ணேன். இப்போ, கதைகள் கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரம் பெரிய திரையில பார்க்கலாம்" என்றார் உற்சாகமாக. 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.