முஸ்லிம் மக்கள்பற்றிய விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு!

பி பி சி க்குத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பேட்டி.

1993 பெப்ரவரி

கேள்வி:
முஸ்லிம் மக்கள் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:
முஸ்லிம் மக்கள் தனித்த பண்பாடுடைய ஓர் இனக்குழு என்றவகையில் அவர்களது பிரச்சினை அணுகப்படவேண்டும்.முஸ்லிம் மக்களின் தனித்துவம்,நில உரிமைப்பாடு பேணப்படும்.அதேவேளை அவர்கள் தமிழ்மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக,அரசியல்,பொருளாதார வாழ்வைச் சிறப்பிக்கும் என நாம் கருதுகிறோம்.சிங்களப் பேரினவாதிகளும் சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையையும் விரோதத்தையும் வளர்த்துவிட முயலுகிறார்கள்.இந்தச் சூழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் பலிக்கடா ஆகக்கூடாது.

கேள்வி:
யாழ்ப்பாணத்திலிருந்து ஏன் முஸ்லிம் மக்களை வெளியேற்றினீர்கள்?அவர்களும் யாழ்ப்பாண மக்கள்தானே?
பதில்:
1990 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இனக்கலவரம் வெடித்து பெரும் தொகையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டபொழுது யாழ்ப்பாணத்திலும் கலவரம் பரவும் ஆபத்து எழுந்தது.அந்த வேளையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாம் அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டோம்.ஆயினும் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம்.

வடபகுதி முஸ்லிம்கள்.

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கும் செய்திகள் வடபகுதியில் பரவப்பரவ அங்கு பதட்டநிலை உருவாகத்தொடங்கியது.
வடபகுதியில் உள்ள தமிழர்களின் உடன்பிறந்தவர்களும்,உறவினர்களும் கிழக்கில் பாதிப்பிற்குள்ளாகும்போது அதற்கு எதிர்நடவடிக்கைகள் தோன்றுவது இயற்கையே.வடபகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்கள் கிழர்ந்தெழக்கூடிய அபாயம் உருவானது.
ஆனால் விடுதலைப்புலிகள் தலையிட்டு கலவரங்கள் ஏற்படுவதை தடுத்தனர்.

கிழக்கு மாகாணத்தில் 5000 க்கு மேற்பட்ட தமிழர்கள் வயதுவேறுபாடின்றி முஸ்லிம் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தபோதும்கூட வடபகுதியில் ஒரு முஸ்லிமிற்குக்கூட எத்தகைய அபாயமும் ஏற்படவில்லை.இதற்கு காரணம் விடுதலைப் புலிகளே.

வடபகுதியில் மன்னார்,யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் இவர்களுள் யாரும் இதுவரை தமிழர்களால் கொல்லப்பட்டதாகவோ,தாக்கப்பட்டதாகவோ எந்த முஸ்லிம்கூட குற்றம்சாட்டியதில்லை.

நிலைமையை புலிகள் இயக்கம் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் தமிழர்களிடையே பதட்டம் தணியவில்லை.அதேவேளையில் முஸ்லிம்களிடையே துரோகிகள் முளைத்தனர்.
வடபகுதியில் புலிகளின் முகாம்கள்,நடமாட்டங்கள் குறித்து சிங்கள இராணுவத்திற்கு தகவல் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் தொடர்புசாதனங்களுடன் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர்.
அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியபோது பல பயங்கரமான உண்மைகள் வெளிவந்தன.கிழக்கு மாகாணத்தைப்போல வடக்கிலும் தமிழர்-முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த சதித்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதற்காக இரண்டு பாரவூர்திகளில் வெடிபொருட்களும் ஆயுதங்களும் மறைக்கப்பட்டு வைத்திருப்பது தெரியவந்தது இவையனைத்தும் தமிழர்கள் கூடும் பகுதிகளில் மறைமுகமாக வெடிக்கவைப்பதற்கும் கண்மூடித்தனமாக சூட்டுத்தாக்குதலை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது.ஆனாலும் இதனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் தொடர்பான விடயமாகக் கையாள விரும்பாத இயக்கம் அவர்களை குற்றம் சுமத்த விரும்பவில்லை.

புலிகளின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ள வடபகுதியில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டால் அதற்கான பழி புலிகள்மீதுதான் சுமத்தப்படும்.

மேலும் முஸ்லிம்களிடையே துரோகிகள் ஊடுருவியிருப்பதை அவர்களாலேயே தடுக்கவும் முடியவில்லை.எனவே முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதியும்,துரோகிகளின் ஊடுருவலைத் தடுக்கவும் வடமாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் அனைவரையும் வெளியேற்றித் தீரவேண்டிய கட்டாயத்திற்கு புலிகள் ஆளானார்கள்.இதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.