ஆடம்பரமற்று நடந்த குறளரசனின் திருமணம்!!

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது.


குறளரசன் -நபீலா அஹமத் ஆகியோரது திருமணம் சென்னை, அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தான் காதலித்த பெண் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், குறளரசனும் கடந்த பிப்ரவரி 16 ஆம் திகதி அவரின் தந்தை முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

இதையடுத்து மிகவும் எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமக்கள் வீட்டார் மட்டுமே இருந்தனர். குறளரசன் நபீலாவின் திருமண வரவேற்பு வரும் 29ஆம் திகதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவுக்கான அழைப்பிதழை சினிமா, அரசியல் பிரமுகர்களிடம் கொடுத்து வந்தார், டி.ராஜேந்தர். திருமணத்தை வீட்டிலேயே எளிமையாக முடித்ததால், வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த உள்ளனர்.

இதனிடையே, உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனுக்குச் சென்ற நடிகர் சிம்பு, தன் தம்பியின் திருமணத்தை முன்னிட்டு சென்னை திரும்பினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.