அகதிகள் விவகாரத்தை கவனிக்க புதிய பதவி: டிரம்ப் திட்டம்!!
அகதிகள் விவகாரத்தை கவனித்து வரும் பல்வேறு அமெரிக்க அரசுத் துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் அதிகாரம் படைத்த புதிய பதவியை உருவாக்குவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
வெளிநாடுகளிலிருந்து அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்குள் அகதிகள் வருவது தொடர்பான விவகாரத்தை பல்வேறு அரசுத் துறைகள் கையாண்டு வருகின்றன.
அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளை பெரும்பாலும் தேசிய பாதுகாப்புப் படையினரே கையாண்டாலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிற துறைகளான சுகாதாரம் மற்றும் மனித நேய சேவைகள் துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, சட்டத் துறை ஆகியவற்றின் நடவடிக்கைகளில் தேசிய பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரங்கள் இருப்பதில்லை. இதன் காரணமாக பல்வேறு குழப்பங்களும், நெருக்கடிகளும் ஏற்படுவதால், அகதிகளைக் கையாளும் விவகாரத்தில் அதிகாரிகளால் திறம்பட செயல்பட முடிவதில்லை என்று அதிபர் டிரம்ப் கருதுகிறார்.
எனவே, அகதிகள் விவகாரம் தொடர்புடைய அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தக் கூடிய அதிகாரம் மிக்க புதிய பதவியொன்றை உருவாக்குவது குறித்து டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.
இந்தப் பதவிக்கு, அகதிகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட கன்சாஸ் மாகாண முன்னாள் செயலர் கிறிஸ் கோபாச், வர்ஜீனியா மாகாண முன்னாள் அட்டர்னி ஜெனரல் கென் கக்கினெல்லி ஆகியோரது பெயர்களை டிரம்ப் தீவிரமாக பரிசீலித்து வருகிறார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை