எல்லை மீறிய பகிடிவதை – உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்!!

எல்லை மீறிய பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்த மாணவன்.மேற்படி மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குருநாகல் – கும்புக்கெட்டே – சடுவாவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஷனில்க தில்ஷான் விஜேசிங்க என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவன், பகிடிவதைக்குள்ளானதன் பின்னர் ஏற்பட்ட உளவியல் தாக்கத்திற்கு குருநாகலிலுள்ள மனநல வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுள்ளதாக கும்புக்கெட்டே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே தியகம தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில், தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனினும் இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.