பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது ஆஸி.!!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்றது ஆஸி. அணி முதல் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் கடைசி 5-ஆவது ஒருநாள் ஆட்டம் துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
முதலில் ஆடிய ஆஸி.அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 327 ரன்களை குவித்தது. உஸ்மான் காஜா 98, ஆரோன் பின்ச் 53, ஷான்மார்ஷ் 61, மேக்ஸ்வெல் 70 ரன்களை விளாசினர்.
பாக். தரப்பில் உஸ்மான் ஷின்வாரி 4-49, ஜுனைத் கான் 3-73 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்களையே எடுக்க முடிந்தது. ஹாரிஸ் சோஹைல் 130, ஷான் மசூத் 50, உமர் அக்மல் 43, இமாத் வாசிம் 50 ரன்களை விளாசினர். ஆஸி. தரப்பில் ஜேஸன் பெஹ்ரென்டர்ப் 3-63 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கடைசி ஆட்டத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. தொடரையும் 5-0 என கைப்பற்றியது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாகத் தேர்வு பெற்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.