தமிழ் மக்கள் மத அடிப்படையில் பிரிவதற்கு இடமளிக்க மாட்டேன்–மனோ!!


தமிழ் மக்களை மத அடிப்படையில் பிரிவதற்கு இடமளிக்க முடியாது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் மத்தியில் மத வன்முறையினைத் தூண்டி அதனூடாக அரசியல் செய்ய சிலர் முற்படுவதாக தெரிவித்திருந்தார். அத்துடன், இதுகுறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு பதில் வழங்கிய போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் மன்னாரிற்கு விஜயம் செய்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் இணைந்து பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.