போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடுத்தப்பட வேண்டும்!!


போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தகுழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரத்துங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பொலிஸாருக்கு அதிகளவில் அழுத்தங்கள் காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரத்துங்க தெரிவித்துள்ளார். எனவே போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவத்தினரை முழுமையாக ஈடுபடுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.